வாழை திரைப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் மாரி செல்வராஜ், நடிகை நிகிலா விமல், திவ்யா துரைசாமி, நடிகர் கலையரசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கபட்டது.
இந்த நிகழ்வில் மாரி செல்வராஜ் பேசுகையில், “முதல்ல நான் தமிழ் திரையுலகத்துக்குத்தான் நன்றி சொல்லணும். இந்த படத்தை எடுத்துட்டு ப்ரொமோட் பண்ணனும்னு நினைக்கும்போது நம்ம தமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கு காட்டுவோம்னு முடிவு பண்ணினேன். நான் அழைச்ச அத்தனை பேரும் இந்த படம் பார்த்துட்டாங்க. வாழை படம் இந்தளவுக்கு நல்லா வர்றதுக்கு காரணம், என்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள்தான். அவங்க நான் படம் பண்ணும்போது ரொம்பவே சுதந்திரம் கொடுத்தாங்க. மாரி செல்வராஜ் எந்த தடையுமில்லாமல் மக்கள்கிட்ட போய் சேர்றதுக்கு காரணம் இந்த தயாரிப்பாளர்கள்தான். திலீப் சுப்புராயன் மாஸ்டர் ஃபைட் சீன் பண்ணுவாரு. என்னுடைய படத்துல சண்டை காட்சிகளுக்கு பெரிய வேல்யூ இருக்காது. அந்த சண்டைக் காட்சிக்குள்ள ஒரு சீன் வச்சிடுவேன்.
அதுக்கான இடமும் கொடுத்து திலீப் சுப்புராயன் மாஸ்டர் வேலை பார்ப்பாரு. அவர் ஜாலியாக இருக்கும்போது குழந்தை மாதிரி ஆகிடுவாரு. ஒரு நல்ல படம் எனக்கு இவரை மாதிரியான நல்ல நண்பர்களை கொடுத்திருக்கு. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி சார் பார்த்துட்டு ‘வசூலாக எப்படி பண்ணும்னு தெரில. ஆனா உங்களுக்கு நல்ல பெயரை நிச்சயமாக பெற்று தரும்’னு சொன்னாரு. இந்த படம் பார்த்துட்டு பூங்கொடி டீச்சர் ஏன் க்ளைமேக்ஸ்ல வரலனு பலரும் கேட்டாங்க. உண்மையாகவே டீச்சர் டேட் இல்ல.
படம் எடுத்து முடிச்சிட்டு ரொம்ப நாள் கழிச்சுதான் பாதவத்தி பாடல் ஷூட் பண்ணினோம். கடைசில அம்மா மடியில சிவனணைந்தன் படுத்துருப்பான். அதுக்குப் பதிலாக டீச்சர் மடியில படுத்திருக்கிற மாதிரிதான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அது இருந்திருந்தால் இப்போ பலர் வைக்கிற மோசமான குற்றச்சாட்டுக்கு அது பதிலாக இருந்திருக்கும். முக்கியமாக என்னுடைய கண்ணீரையும் கவலையையும் கலை வடிவமாக மாற்றியதுதான் என்னுடைய பெருமை. இப்போ நான் இந்த படத்தின் மூலமாக ரெண்டு பேரை உருவாக்கிட்டேன். அது பெருமை. அந்த ரெண்டு பேர் அடுத்து ரெண்டு பேரை உருவாக்குவாங்க. வாழை எங்களுடைய பெரிய உழைப்பு. எங்களுடைய பெரிய நம்பிக்கை. வாழை இவ்வளவு பெரிய வெற்றி அடைஞ்ச பிறகு நான் வீட்டுலேயேதான் இருந்தேன். இந்த படம் பார்த்துட்டு பலரும் எங்களை இந்த படத்துல காட்சிப்படுத்த மறந்துட்டீங்கனு சொன்னாங்க.
இந்த படத்தின் மூலமாக இஸ்லாமிய தோழர்கள்தான் காப்பாத்தினாங்கங்கிற உண்மை வெளிய வந்திருக்கு. அன்னைக்கு மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி. என்னுடைய வெற்றியின் வேர் என்னுடைய மனைவிகிட்டதான் இருக்கு. என்னுடைய தந்தை, தாயை ‘ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறாங்க’னு நினைச்சுகிட்டு இருந்த நான், 30 வருஷத்துல இங்க வந்து இந்த கலையின் வடிவில்தான் எனக்கும் எங்க அம்மாவுக்குமான உறவை புரிஞ்சுகிட்டேன். எங்க அம்மாவும் இதை ஏத்துகிட்டதுக்கு கலைதான் காரணம். இந்த கலைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன். ‘வாழை-2’ நிச்சயமாக எடுப்பேன். இதுக்கு பின்னாடி இருக்கிற கதையை சிவனணைந்தனை வச்சு எடுப்பேன். அது என்னை இன்னும் நீங்க புரிஞ்சுகிறதுக்கு வழி வகுக்கும்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…