Viral: குளிக்காமல் அடம்பிடிக்கும் கணவர்; விவாகரத்து கோரிய மனைவி; திகைத்துப் போன நீதிமன்றம்

திருமணமான 40ஆவது நாளிலே, கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார் இளம் பெண் ஒருவர். அவர் கூறிய விவகாரத்திற்கான காரணம்தான் தற்போது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

சித்திரவதை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சில காரணங்களுக்காக விவாகரத்து கேட்டு வரும் தம்பதியினர் மத்தியில், குளிக்காத கணவரோடு வாழ முடியாது என்று கூறிய மனைவியால் நீதிமன்றமே பரபரப்பாகி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அந்த பெண்ணுக்குத் திருமணமாகி வெறும் 40 நாள்தான் ஆகிறது.

representation Image

இந்த 40 நாளில் அந்த பெண்ணின் கணவர் 6 முறை மட்டுமே குளித்ததாகவும், இதனால் அவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அதனைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், ஒரு மாதத்திற்கு 2 முறை மட்டுமே குளிப்பதை வழக்கமாக அவர் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து அந்த பெண் குடும்ப நலன் ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது உண்மைதானா என்று அறிய அந்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அந்த நபர் கங்கை ஆற்றுத் தண்ணீரை வாரம் ஒருமுறை தனது உடம்பில் தெளித்துக்கொள்வார் என்றும் மனைவி வற்புறுத்தியதாலேயே 40 நாள்களில் 6 முறை குளித்ததாகவும் கூறியிருக்கிறார்.

representation Image

திருமணமான சில நாளிலேயே தனது கணவனின் இந்த ஆரோக்கியமற்ற செயல்பாட்டைக் கண்ட மனைவி அவருடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்திருக்கிறார். எவ்வளவு சொல்லியும் கணவன் குளிக்காமலிருந்ததால் உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த சம்பவம் வழக்கறிஞரையும், நீதிபதியையுமே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.