ஐபோன் 15 இலவசமாக வெல்லலாம்… அமேசான் வழங்கும் அற்புத வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க

Amazon Great Indian Festival Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு  கூடுதல் வாய்ப்பை வழங்க, முந்தைய ஆண்டுகளைப் போலவே, செப்டெம்பர் 26 ஆம் தேதி முதலே சலுகை விற்பனையை பெறலாம். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற  எலக்ட்ரானிக்ஸ் சாதனம் மட்டுமல்லாது, வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல வகை பொருட்களுக்கு மீது பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சலுகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 ஐ இலவசமாக வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சொல்லுவோம்…

அமேசானில்  ஐபோன் 15 (iPhone 15) இலவசமாகப் பெற செய்ய வேண்டியது என்ன?

அமேசானின் ‘Get Sale Ready’ சலுகையில் ஐபோன் 15 ஐ வெல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ‘Spin and Win’ கேமை விளையாடினால் போதும், இலவச iPhone 15ஐ வெல்ல நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட ட்ராவில் பங்கேற்பது எப்படி?

1. Amazon India ஆப் அல்லது இணையதளத்திற்குச் செல்லவும்.

2. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் பேனரைத் தட்டவும்.

3. இங்கே நீங்கள் ‘Get Sale Ready’ பேனரைக் காண்பீர்கள், அங்கு ‘Chance to Win an iPhone 15’ என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதைத் தட்டவும்.

4. நீங்கள் இப்போது அமேசானின் ஃபன் சோன் ( Amazon’s Fun Zone)  என்னும் பிரிவிற்கு செல்வீர்கள், இதில் ‘Spin and Win’ கேமை காணலாம். அதைத் தட்டி சக்கரத்தை சுழற்றவும்.

5. நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஆப்பிள் ஐபோன் 15ஐ வெல்வதற்கான ஜாக்பாட் வெல்லலாம்.

Spin and Win கேமின் வெற்றியாளர் அக்டோபர் 1, 2024 அன்று அறிவிக்கப்படுவார் என்று அமேசான் கூறியுள்ளது. மேலும், இது ஒரு முறை விளையாட்டு. அதாவது நீங்கள் இதனை ஒரு முறை மட்டுமே விளையாட முடியும்.

ஐபோன் 15 சிறப்பு அம்சங்கள்

2024 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஆப்பிள் ஐபோன் 15, 2023ம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் ஐபோன் 15 மாடல் போன் 6.1 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டது. iOS18 மென்பொருள் புதுப்பித்தலுடன் இணக்கமானது. பின்புறத்தில் 48எம்பி முதன்மை கேமரா உள்ளது.  சார்ஜ் செய்வதற்கு USB Type-C போர்ட் கொண்டுள்ளது.

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16  சீரிஸ் போன்களான.  iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை அறிமுகமான உடனே,  ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது  குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.15 ஆயிரம்  என்ற அளவிலிம்  ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 விலை ரூ.10 ஆயிரம்  என்ற அளவிலும் குறைந்துள்ளது.

iPhone 15 128GB மாடல்: பழைய விலை ₹79,600, புதிய விலை   ₹69,900

iPhone 15 256GB மாடல்: பழைய விலை ₹89,600, புதிய விலை  ₹79,900

iPhone 15 512GB மாடல்: பழைய விலை  ₹1,06,600, புதிய விலை  ₹99,900

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.