,2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும்.
அதன்படி இன்று (18) நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் காட்சிகள்/ புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இன்று இரவு செய்தி மற்றும் அடுத்த நாள் இரவு செய்தி மற்றும் நாளை (19) காலை செய்திப் பத்திரிகைகளில் மற்றும் அன்று நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்திக்காட்சிகளில் மாத்திரம் வெளியிட வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் அப்பிரச்சாரக் கூட்டங்களின் அறிக்கை அல்லது ஏனைய பிரச்சார விளம்பரங்கள் போன்றவை எதையும் ஒளிபரப்புதல் அல்லது வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அது தவிர தொலைக் காட்சி அலைவரிசைகள் மற்றும் செய்தித் தாள்கள் மற்றும் ஏனைய சகல சமூக ஊடகங்களுக்கும் இந்த அறிவித்தல் ஏற்புடையதாகும்.