Ajith: `அஜித் சார பார்த்த அந்த ஒரு நிமிஷம்…' – நடிகர் கவின் நெகிழ்ச்சி!

சின்னத்திரை மூலம் அறிமுகமான கவின், தனது ஆரம்ப காலத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், வெள்ளித்திரை பக்கம் தனது பயணத்தைத் திருப்பியிருக்கிறார்.

‘லிஃப்ட்’, ‘டாடா’ மற்றும் ‘ஸ்டார்’ என அவர் நடித்த மூன்று திரைப்படங்களுமே தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘Bloody Beggar’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கவின் மற்றும் நெல்சன், நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. நேற்று முன்தினம் நடந்த சைமா விருது விழாவில் ‘மோஸ்ட் ப்ராமிசிங் நடிகர்’ என்ற பிரிவில் விருதைப் பெற்ற நடிகர் கவின், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் அவர், “நானும் நெல்சனும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தோம். அந்த வழியாக அஜித் சார பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் தீடீரென அமைந்தது.

இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு பத்து நொடிகள்தான் சந்தித்திருப்போம். அவரைப் பார்த்த வியப்பில் இருந்து வெளியே வருவதற்குள் ‘Bye’ சொல்லிட்டு போயிட்டார் அஜித் சார். வாழ்நாளில் மறக்க முடியாதத் தருணமாக அது அமைந்தது” என்றார்.

அர்ஜுன்

இதையடுத்து விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த வில்லன் நடிகர்’ என்ற சைமா விருதினைப் பெற்ற நடிகர் அர்ஜுன், அஜித்தின் ‘விடாமுயற்சி’ குறித்து, “இறுதிக்கட்ட காட்சிக்கானப் பணிகளை முடித்துவிட்டுத்தான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். படம் பிரமாதமாக வந்திருக்கிறது. வரும் டிசம்பரில் ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.