Wayanad: `ஒரு உடல் தகனம் செய்ய ரூ.75,000; உணவுக்கு ரூ.10 கோடி?' – அரசின் பேரிடர் கணக்கால் சர்ச்சை

வயநாடு துயரம்

கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 400 பேர் மரணமடைந்துள்ளனர். காணாமல்போன பலரின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தியும் முழுமையாக கண்டறியப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வயநாடு மீட்புப்பணி மற்றும் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான செலவு, மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான உணவுச் செலவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 2-ம் வாரத்தில் செலவு கணக்குகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐகோர்ட்டுக்கு அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தின் குறிப்பாணை மூலம் செலவு விபரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ராணுவம் மற்றும் தன்னார்வலர்களுக்கு தங்குவதற்காக 15 கோடி ரூபாய் செலவானதாகவும், உணவுக்கு ரூ.10 கோடி, டார்ச், குடை, ரெயின்கோட் வாங்குவதற்கு 15 கோடி ரூபாய் செலவானதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள முதல்லர் பினராயி விஜயன்

மேலும் ஒரு உடலை தகனம் செய்வதற்கு 75,000 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்புபணியின்போது தன்னார்வலர்கள் உணவு வழங்கியதாகவும், இறந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்று தகனம் செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது. மீட்கப்பட்ட உடல் பாகங்களை அடக்கம் செய்யும் செலவை எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு தொகை செலவு ஆகும் என எதிர்கட்சிகள் விவாதத்தை கிளப்பின.

இதையடுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “அதில் உள்ளது செலவு கணக்கு அல்ல. பேரிடர் நிவாரண நிதி தேவைக்கு ஏற்ப விதிமுறைபடி தயாரிக்கப்பட்ட கோரிக்கை மட்டுமே” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “ஐகோர்ட் மூலம் வெளியன கணக்குகள் வயநாடு பேரிடர் நிவாரனத்தின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. இது மத்திய அரசுக்கு கொடுத்த மனு என மாநில அரவு சொல்கிறது. மத்திய அரசுக்கு இப்படியா கோரிக்கை மனு கொடுப்பது. சாதாரான மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கணக்குகள் அதில் கூறப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள சாதாரண கிளர்க் கூட இப்படி தயாரிக்கமாட்டார்.

காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

நிறையபேர் உறவினர்களின் உடல்களை வாங்கி கொண்டுபோனார்கள். மற்ற சில உடல்களையும், உடல் பாகங்களையும் தகனம் செய்ய பஞ்சாயத்து சார்பில் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான வசதிகளை அங்குள்ள சிலர் செய்தனர். எல்லாவற்றையும் தன்னார்வலர்கள் செய்த நிலையில் ஒரு உடலை தகனம் செய்ய 75 ஆயிரம் ரூபாய் செலவானதாக சொன்னால் அதை எப்படி நம்ப முடியும். மீட்புப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு ஓட்டல் அசோசியேசனைச் சேர்ந்தவர்கள் உணவு கொடுத்தார்கள். மிகவும் கவனத்துடன் மெமராண்டம் தயாரித்து மத்திய அரசுக்கு கொடுத்தால், நியாயமான முறையில் அதிக நிதி பெற முடியும். நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இதை தயாரித்துள்ளனர். முதல்வர் நிவாரண நிதிக்கு வரும் பணம் தனி கணக்கில் போட்டு அதன் வரவு செலவுகளை தினமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்து வருகிறோம். அதைச் செய்யாமல் இருந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.