இன்று (19) முதல் 22 ஆம் திகதி வரை விசேட தேர்தல் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவு அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலையை இக் காலகட்டத்தில் புறக்கணிக்க முடியாது என்றும் இதன் போது அனர்த்தங்களால் தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முப்படையினர் மற்றும் போலீசார் உட்பட சகல தரப்பினரும் ஒருங்கிணைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட தேர்தல் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலப் பகுதியில் ஏதேனும் அனர்த்த நிலமைகள் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக அல்லது வாக்களிப்பதற்கு இடையூறு ஏற்படுமாயின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் அவசர தொலைபேசி இலக்கமான 117 அல்லது அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைந்த அவசர முகாமைத்துவ பிரிவு இலக்கங்களான 0113-668032 அல்லது 0113-668087 அல்லது 0113 -668025 அல்லது 0113-668026 மற்றும் 0113 -668119 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அது தொடர்பாக உடனடியாக அறிவிப்பதுடன் இடையூறுகளை நீக்கப்படும்.
இவ் விசேட ஒருங்கிணைந்த அவசர மத்திய பிரிவின் இலக்கம் இன்று (19) முதல் 22 வரை மாத்திரமே செயற்படுத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அனர்த்தம் காரணமாக எதிர் கொள்ள கூடியதாக காணப்படும் இடையூறுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவசர அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் https://www.dmc. gov.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.