மதுரா,
உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதியருகே நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூரத்கார் மின்சார ஆலைக்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த சரக்கு ரெயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன.
இதனை ஆக்ரா பிரிவுக்கான மண்டல ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், இந்த வழியில் செல்ல கூடிய 3 ரெயில்வே வழிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
இந்த ரெயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. ரெயில் தடத்தில் மீண்டும் ரெயில் போக்குவரத்து மேற்கொள்வதற்கான சீரமைப்பு பணிகளில் ரெயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.