Flipkart Big Billion Days Sale: பிளிப்கார்ட் வழங்கும் பண்டிகை கால சலுகை விற்பனை விரைவில் தொடங்கப் போகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, சில ஸ்மார்ட்போன் வாங்குவதில் கிடைக்க உள்ள தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில் ஒன்று பிரீமியம் போன்கள் முதல் நடுத்தர வகையி;ல் உள்ள போன்கள், பட்ஜெட் போன்கள் என அனைத்து வித ஸ்மாட்போன்கள் மீதும், சிறந்த தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகள் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனை செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும். எனினும், பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான சலுகை விற்பனை, 24 மணிநேரத்திற்கு முன்னதாக, அதாவது செப்டம்பர் 29, 2024 முதலேயே தொடங்கி விடும். சலுகை விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்லாது, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
பிக்சல் 8 இந்தியாவில் ரூ.75,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சலுகை விற்பனையில் ரூ. 40,000-க்கும் குறைவாக வாங்கலாம். ஆனால், இதற்கான நிபந்தனைகள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன், ரூ.19,999 என்ற விலையிலும், மோட்டோ எட்ஜ் 50 ரூ.24,999 என்ற விலையிலும் வாங்கலாம் என கூறப்படுகிறது. மோட்டோ எட்ஜ் 50 நியோவின் விலை ரூ.22,999 என்ற அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Poco போன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 18ஆம் தேதியும், Vivo போன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 19ஆம் தேதியும், சாம்சங் போன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 20ஆம் தேதியும், Oppo, Xiaomi, Infinix மற்றும் Google Pixel போன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 21ஆம் தேதியும், நத்திங் போன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 22ஆம் தேதியும், ஐபோன்களுக்கான சலுகை விபரங்கள் செப்டம்பர் 23ஆம் தேதியும் அறிவிக்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஐபோனில் கிடைக்கும் தள்ளுபடி விபரம்
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு சிறந்த சலுகைகளையும் எக்ஸ்சேன்ஞ் ஆபர்களையும் பிளிப்கார்ட் வழங்கியுள்ளது. அதாவது பழைய ஐபோன்களில் நல்ல தள்ளுபடி சலுகைகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் ஏற்கனவே ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் iPhone 15 Pro ஆனது ரூ.1,09,900 விலைக்கு விற்கப்படுகிறது. அதன் அறிமுக விலை ரூ.1,34,900 என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ரிலையன்ஸ் டிஜிட்டல் தளம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 தள்ளுபடி வழங்குகிறது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஐபோன் 15 ப்ரோவின் ப்ளூ டைட்டானியம் மாடலுக்கு மட்டுமே பொருந்தும்.
வங்கி சலுகைகள் விபரம்
பிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகள் தவிர, வாங்குபவர்கள் வங்கி சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், Flipkart UPI மூலம் பணம் செலுத்துபவர்கள் ரூ.50 வரை தள்ளுபடி பெறலாம்.