சினிமா நட்சத்திரங்கள் பலரும் தற்போது அவர்களின் சினிமாவை தாண்டி பிசினஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சிலர் இது போன்ற பிசினஸ் தொடங்குவதை சினிமாவை தாண்டி ஒரு லட்சியமாகவும் கருதி செய்து வருகிறார்கள். அந்த வகையில் சூரி மதுரையில் சொந்தமாக ஹோட்டல் வைத்திருக்கிறார். இவரை தொடர்ந்து நடிகர் ஆரியாவும் சென்னையில் ஹோட்டல் வைத்திருக்கிறார். பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் உணவக பிசினஸை நடத்தி வருகிறார்கள்.
இது போக ஆடை பிசினஸையும் சில சினிமா நட்சத்திரங்கள் செய்து வருகிறார்கள். இயக்குநர் அட்லீயின் மனைவியான ப்ரியா அட்லீயும் சமீபத்தில் ஆடை பிசினஸ் ஒன்றையும் தொடங்கியிருந்தார். இதை தாண்டி சிலர் நம்பிக்கையான தொழில்களில் முதலீடும் செய்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘கூக்டு’ என்ற டிஜிட்டக் குக்கிங் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்திருக்கிறார். தற்போது ‘டிக்கெட் 9’ என்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் நடிகை நயன்தாராவும் அவரின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
நயன்தாரா ஏற்கெனவே ‘ஃபெமி 9’ என்ற நாப்கின் பிசினஸையும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், ‘9 ஸ்கின்’ என்ற ஸ்கின்கேர் பிரான்ட் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியிலும் முதலீடு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக இந்த ‘டிக்கெட் 9’ ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், “தென்னிந்தியாவின் முன்னனி நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் எங்களுடைய ‘டிக்கெட் 9’-ல் முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய முதலீடு எங்கள் நிறுவனத்தின் மைல்கல். எங்களின் பார்வை மீதான இவர்களின் நம்பிக்கை அர்பணிப்புடன் ஈவென்ட் வேலைகளை பார்ப்பதற்கு எங்களின் உறுதிபாட்டை வலுப்படுத்துகிறது.
இவர்களின் ஆதரவுடன் எங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் சந்தையை விரிவுபடுத்தவுள்ளோம். அதன் மூலம் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தங்கு தடையற்ற அனுபவத்தை கொடுக்கவுள்ளோம். ” எனப் பதிவிட்டிருக்கிறது.