சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (19.09.2024) முதல் 25.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (19.09.2024 மற்றும் 20.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில […]