இந்தியாவின் மிகவும் பிரபலமான செடான் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த மாடல் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் விற்பனைக்கு போன்ற விபரங்கள் எல்லாம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்போது முழுமையான விபரங்கள் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
தோற்ற அமைப்பில் தற்பொழுது விற்பனையில் கிடைக்கும் என்ற ஸ்விஃப்ட் காரை விட மாறுபட்ட டிசைன் அமைப்பு முன்புற கிரில் மற்றும் எல்இடி ஹெட்லைட் போன்றவற்றில் எல்லாம் மாறுபட்டு அமைந்திருக்கின்றது.
கிடைமட்டமான கிரில் மற்றும் அதற்கு அருகாமையில் இணைக்கப்பட்டுள்ள மிகவும் தட்டையான எல்இடி ஹெட்லைட் போன்றவை இந்த காருக்கு புதியதொரு தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. கீழே வழங்கப்பட்டுள்ள பம்பர் மற்றும் பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் பெற்றிருக்கின்ற நிலையில் பின்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் எல்இடி டையில் லைட் சேர்க்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக துவக்க நிலை செடான் சந்தையில் சன்ரூஃப் பெறுகின்ற மாடலாக விளங்க உள்ள 2024 டிசையர் காரின் இன்டீரியர் அமைப்பு ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்விஃப்ட் காரில் இருந்து பெறப்பட்டது போலவே தெரிகின்றது குறிப்பாக 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, கனெக்ட்விட்டி அம்சங்களை பெற உள்ளது.
மேலும் புதிய 2024 மாடலில் அடிப்படையாகவே ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் இஎஸ்பி ஆகியவற்றைப் பெற்றிருக்கும்.
விற்பனைக்கு எப்பொழுது என்பது பற்றி எந்த உறுதியான தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை அனேகமாக அக்டோபர் மாதம் புதிய டிசையர் அறிமுகம் குறித்து மாருதி சுசூகி தனது முதல் டீசரை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ரூ.7 லட்சத்துக்கும் குறைவான ஆரம்ப விலையில் தொடங்க உள்ள இந்த மாடல் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, மற்றும் டாடா டிகோர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
image source – dpanshu garage