வரும் அக்டோபர் 8ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள பிஓய்டி நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எலெக்ட்ரிக் எம்பிவி ரக மாடலின் முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தூங்குகின்றது முன்பதிவு கட்டணமாக ரூபாய் 51 ஆயிரம் வசூலிக்கப்படுகின்ற நிலையில் முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்த உள்ளதாக பிஓய்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 8, 2024க்குள் BYD eMAX 7 காரை முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு, டெலிவரி செய்யப்பட்டவுடன் ரூ. 51,000 & இலவச 7 kW, 3 kW சார்ஜர் போன்ற அற்புதமான பலன்களை இந்நிறுவனம் வழங்குகிறது. அக்டோபர் 8, 2024க்குள் வாகனத்தை முன்பதிவு செய்து, மார்ச் 25, 2025க்குள் டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வரையறுக்கப்பட்ட சலுகை கிடைக்கும்.
தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மாடல்களில் ஒற்றை 71.8Kwh பேட்டரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால் இதே ஆப்ஷனை தொடர்ந்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
204hp பவர் மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 71.8Kwh பேட்டரி கொண்ட மாடல் சிங்கிள சார்ஜில் 530 கிமீ வெளிப்படுத்தலாம். சிறிய பேட்டரியை பெறுகின்ற சில நாடுகளில் 420 கிமீ ரேஞ்ச் வழங்கும் 55.4kWh பேட்டரி பேக் 163hp பவர் மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது.
இந்தியாவில் பிஓய்டி இமேக்ஸ் 7 எலெக்ட்ரிக் எம்பிவி விலை ரூபாய் 30 லட்சத்தில் துவங்கலாம்.