மாருதி சுசூகி நிறுவனம் வேகன் ஆர் காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு Waltz எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.5.65 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
1999 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் தற்பொழுது வரை 32.50 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்செஸரீஸ் மதிப்பு 65,624 ஆக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான டால்பாய் ஹேட்ச்பேக் வேகன் ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனில் வீல் ஆர்ச் கிளாடிங், பம்பர் புரொடக்டர்கள், சைட் ஸ்கர்ட்ஸ், சைட் பாடி மோல்டிங், டிசைனர் ஃப்ளோர் மேட்ஸ், சீட் கவர்கள் மற்றும் குரோம் கார்னிஷ் கிரில் போன்ற கூடுதல் ஆக்செரீஸ் பாகங்கள் உள்ளன.
முன்பக்கத்தில், வால்ட்ஸ் எடிசனுக்கான பனி விளக்குகள், 6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
மற்ற அடிப்படையான பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் டூயல் ஏர்பேக் ஏபிஎஸ் உடன் இபிடி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட், மற்றும் ESP ஆகியவற்றை பெற்றுள்ளது.
1.0 லிட்டர் K10 எஞ்சின் ஆப்ஷனில் 1.2-லிட்டர் K12 என இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.