2023/2024 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z) வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதற்கினங்க வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மாலை 6:00 மணி முதல் அதற்கான வெட்டுப்புள்ளிகளை, www.ugc.as.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.