சென்னை: சென்னையில் ஏராளமான கிளைகளைக்கொண்டுள்ள எஸ்எஸ் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையின் பிரபலன அசைவ ஓட்டல்களில் எஸ்எஸ் பிரியாணி ஓட்டலும் ஒன்று. இதற்கு சென்னையில் மட்டுத்ம 25க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இங்குள்ள பிரியாணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால், வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பிரியாணி உள்பட அசைவ உணவுகள் வாங்க கூட்டம் அலைமோதும். […]