எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வின்ட்சர் இவி காரை தொடர்ந்து தற்பொழுது பேட்டரியை வாடகைக்கு விடும் முறையான BAAS (Battery As A Service) திட்டத்தை காமெட் இவி மற்றும் ZS இவி என இரண்டு மாடல்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பேட்டரி ஏஸ் ஏ சர்வீஸ் திட்டத்தின் கீழ் தற்பொழுது காமெட் இவி 2 லட்சம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு தற்பொழுது 4.99 லட்சம் ரூபாயாக ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூடுதலாக நாம் ஒவ்வொரு கிலோ மீட்டர் பயணிக்கும் பொழுதும் ரூபாய் 2.50 காசுகள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி மற்றும் ரேஞ்ச் தொடர்பாக எந்த ஒரு மாறுதல்களும் வசதிகளிலும் மாறுதல்கள் இல்லை.
காமெட் எலெக்ட்ரிக் கார் 42 PS பவர், 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் மூலம் முழுமையாக சிங்கிள் சார்ஜில் 230 கிமீ பயணிக்கின்ற வரம்பை கொண்டுள்ளது.
அடுத்ததாக எம்ஜி-யின் மற்றொரு நடுத்தர பேட்டரி வாகனமான ZS EV விலை BAAS திட்டத்தின் கீழ் வாங்கினால் ரூபாய் 5 லட்சம் குறைவாக தொடங்குகிறது. எனவே இந்த மாடலின் ஆரம்ப விலை தற்பொழுது 13.99 லட்சம் ஆகும். கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டர் பேட்டரி பயணத்தின் போதும் அதிகபட்சமாக ரூபாய் 4.50 காசுகள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
50.3kWh பேட்டரி பேக்குடன் 461km ரேஞ்ச் வெளிப்படுத்தும் ZS EV மின்சார கார் அதிகபட்சமாக 176hp மற்றும் 353Nm டார்க் வழங்குகின்றது.
மேலும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 45,000 கிமீ க்கு பிறகு இந்நிறுவனமே அறுபது சதவீத பை பேக் திட்டத்தின் கீழ் வாகனத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.