பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும்.
BSNL நிறுவனம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் தனது 5G சேவைகளை விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என கூறப்படுகிறது. ஏனெனில், 5ஜி சேவை தொடங்குவதன் மூலம் தனியார் நிறுவனங்களை விட BSNL மலிவான கட்டணத்தில், அதி வேக இணைய சேவையை வழங்கும்.
பிஎஸ்என்எல் 5ஜி சோதனை தொடங்கியது (BSNL 5G Trial)
தற்போது BSNL, சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு இடங்களில் 5G நெட்வொர்க்கை சோதிக்கத் தொடங்கியுள்ளது. லேகா வயர்லெஸ், கலூர் நெட்வொர்க்குகள், விவிடிஎன் டெக்னாலஜிஸ் மற்றும் வைசிக் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல், இணைந்து செயல்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு, பிஎஸ்என்எல் விரைவில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதி வேக இணையத்தை வழங்கும்.
BSNL 5G சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள்
நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் BSNL, டெல்லியில் பல இடங்களில் 5G நெட்வொர்க்கை சோதித்து வருகிறது. லேகா வயர்லெஸ் மின்டோ சாலையில், சாணக்யபுரியில் VVDN டெக்னாலஜி மற்றும் ஷாதிபூர், ராஜேந்திர நகர் மற்றும் கரோல் பாக் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக விரைவில், நாட்டின் பிற பெருநகரங்களிலும் சோதனைகள் தொடங்க உள்ளன.
ஜியோ-ஏர்டெல்லை விட மலிவாக கட்டணத்தில் அதிவேக இணைய சேவை
மலிவான கட்டணத்தில், அதிவேக இணையத்தை விரும்புபவர்களுக்கு, BSNL 5G சேவை சிறந்த தேர்வாக இருக்கும். தனியார் நிறுவனங்கள் தங்கள் போஸ்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளை அதிகரித்து வரும் நிலையில், BSNL ஏற்கனவே மலிவான திட்டங்களை வழங்குகிறது. எனவே, பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கம்
BSNL தனது 5G சேவையை தொடங்கும் நோக்கும், அதிவேகமான இணையத்தை வழங்குவது மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவைச் சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்காகவும் தான். பிஎஸ்என்எல், லேகா வயர்லெஸ் மற்றும் விவிடிஎன் டெக்னாலஜி போன்ற உள்ளூர் நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது. இது இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையை வலுப்படுத்த உதவும், மேலும் உள்ளூர் நிறுவனங்களும் வளரும். தற்சார்பு இந்தியா என்னும் அரசின் ஊக்க் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது