‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘நந்தன்’.
ஹீரோயினாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படம் பார்த்த சிவகார்த்திகேயன் படக்குழுவைப் பாராட்டி இருக்கிறார்.
“எனது அன்பு அண்ணன்கள் சசிக்குமார் அவர்களும், இரா.சரவணன் அவர்களும் இனணந்து கொடுத்திருக்கக்கூடிய ஓர் அற்புதமான படைப்பு நந்தன். சசிகுமார் அண்ணன் ஒரு வித்தியாசமான முயற்சியைச் செய்திருக்கிறார் என்று நினைத்து படத்தைப் பார்க்க சென்றேன். படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குநர் இரா.சரவணன் என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார். எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தின் முதல் காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது.
அதன் பின்னர் சசிக்குமார் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார். உண்மைக்கு மிக நெருக்கமாக சசிகுமார் இந்தப் படத்தில் இருந்தார்… இவ்வளவு நெருக்கமாக படம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன்.
“படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி #Nandhan @SasikumarDir @thondankani @tridentartsoffl pic.twitter.com/LYVFOCOhN2
— இரா.சரவணன் (@erasaravanan) September 20, 2024
நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியாக மிக வேகமாக கை தட்டினேன். இது எல்லாவற்றையும் ஏற்படுத்தியது இரா.சரவணனின் எழுத்தும் மேக்கிங்கும்தான். நந்தன் அருமையான படைப்பு” எனப் பாராட்டி இருக்கிறார்.
இந்த வீடியோவை படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து “சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி” என்று பதிவிட்டிருக்கிறார்.