Vettaiyan : `ஜெய் பீம் படத்தை ரஜினி சார் பாராட்டலைன்னு வருத்தமா இருந்துச்சு, ஆனா…' – த.செ.ஞானவேல்

‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ படங்களை அடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

ரஜினியுடன் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

வேட்டையன் இசை வெளியீட்டு விழா!

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், “ரஜினிசாருக்கு தெரிஞ்ச ரசிகர்களைவிட தெரியாத ரசிகர்கள்தான் அதிகம். அதுல நானும் ஒருத்தன். உங்க படத்தோட கொண்டாட்டத்துல நானும் கலந்துட்டு அமைதியாக மனசுக்குள்ள ரசிப்பேன். இந்த இடத்தில நான் சூர்யா சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் இப்போ இந்த மேடையில நிக்குறதுக்கு முக்கியக் காரணம் சூர்யா சார்.

தமிழ் சினிமாவுல எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அழைச்சு பாராட்டுவார். அதே மாதிரி ‘ஜெய் பீம்’ படத்துக்கு ரஜினி சார் பாராட்டுவாருன்னு நினைச்சேன். ஆனால் அவர் கூப்பிடவே இல்ல. நான் அவர் கூப்பிடுவார்னு சட்டை எல்லாம் வாங்கி வச்சு இருந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செளந்தர்யா மெசேஜ் பண்ணாங்க. அதுக்குப் பிறகு அப்பாக்கு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போ நான் சும்மா இல்லாம இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு செளந்தர்யா மேம், ‘அப்பாவும் உங்க ஜெய்பீம் படம் பார்த்துட்டாங்க ரொம்பப் பிடிச்சுருக்குனு சொன்னாங்க,’னு சொன்னார்

த.செ.ஞானவேல்

ஒரு நாள் ரெண்டு கதை எடுத்துட்டுப் போனேன். ஒன்னு ‘வேட்டையன்’ படத்தோட கதை. இன்னோன்னு ஜாலியான கதையை எடுத்திட்டு போனேன். அப்போ செளந்தர்யா மேம் வேட்டையன் கதை கேட்டு நல்லா இருக்கு. அப்பா பண்ணினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. இன்னொரு கதை இருக்குனு சொன்னேன். அப்போ இதுவே இருக்கட்டும்னு சொன்னாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்க கால் பண்ணினாங்க. அப்போ அந்த மந்திர குரல் கேட்டுச்சு… இந்தக் கதையை டெவலப் பண்ண சொன்னாரு ரஜினி சார். அப்போ எனக்கு நிறைய கமிட்மென்ட் இருந்தாலும் இந்தக் கதைல வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்

எனக்கு ‘படையப்பா’ படத்துல வர்ற ஊஞ்சல் சீன் ரொம்ப பிடிக்கும். அனிருத்துக்கு ‘அண்ணாமலை’ படம் மாதிரி எனக்கு இந்தக் காட்சி ரொம்ப பிடிக்கும். இந்த படத்துல இந்த கதாபாத்திரத்துக்கு இவங்கதான் நடிக்கணும்னு எழுதினேன். அதே மாதிரி அவுங்களும் இந்த படத்துல நடிச்சுட்டாங்க. அதுக்கு காரணம் ரஜினி சார்ங்கிற கோல்டன் விசா. அதே மாதிரிதான் லைகா நிறுவனமும். அமிதாப் சாரும் ரஜினி சாரும் செட்ல ஒன்றாக இருக்கிறது நமக்கு வாழ்க்கை பாடம். மும்பைல ஷூட்டிங் நடக்கும்போது ரஜினி சார் என்கிட்ட நான் செட்டுக்கு வந்ததும்தான் அமிதாப் சார்கிட்ட சொல்லணும்னு சொன்னாரு. நானும் இதை சொல்லிட்டேன். ஆனால் அமிதாப் சார், ரஜினி சார் செட்ல இருக்கார்னு தெரிஞ்சா உடனே செட்டுக்கு வந்துருவார். ரெண்டு பேரும் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்திருவாங்க.

வேட்டையன்

ஒருநாள் பேட்டியில ‘வேட்டையன்’ படத்தைப் பத்தி ரஜினி சார்கிட்ட கேட்டாங்க. அதுக்கு அவர் ‘கருத்துள்ள, பிரமாண்டாமான பொழுதுபோக்கு திரைப்படம்’னு சொன்னாரு. இதை நமக்குத்தான் சொல்றாங்கன்னு எடுத்துக்கிட்டு நான் வேலை பார்த்தேன்.

‘எப்போதும் என்கிட்ட தயாரிப்பாளர் காசு போடுறாரு அவங்க பணம் எடுக்கணும். மக்கள் நம்பி வர்றாங்க அவங்களை ஏமாத்திடக் கூடாதுனு’ சொல்லிட்டே இருப்பார் ரஜினி சார். நான் ஒரு பத்திரிகையாளர்.. இன்னும் எனக்குள்ள ஒரு பத்திரிகையாளர் இருக்கார். அதனால, நான் ரஜினி சார் கிட்ட கேள்வி கேட்டுட்டே இருப்பேன். ஒருதடவ, ‘நீங்க சினிமாவுக்கு வந்து 50 வருஷமாச்சு.. எப்படி எல்லாத்தையும் தக்க வைக்கிறீங்க’னு கேட்டேன். அதுக்கு அவர் ‘Adjust, Accomodate, Adopt’ னு சொன்னாரு. அதுல இருந்து நானும் அவர் சொன்னத பின்பற்றத் தொடங்கிட்டேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.