Vettaiyan : ரஜினி என்ட்ரி, விஜய்யின் 'கத்தி'; அதிர்ந்த அரங்கம் – 'வேட்டையன்' இசை வெளியீட்டு விழா!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’.

அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேட்டையன் இசை வெளியீட்டு விழா!

நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னரே தாரை தப்பட்டை என கொண்டாட்டத்துடன் அரங்கில் குவிந்தனர் ரஜினி ரசிகர்கள். இதையடுத்து இயக்குநர் த.செ.ஞானவேல், மஞ்சு வாரியர், அனிருத், அபிராமி, ரானா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராப் பாடகர் அறிவு, ரக்‌ஷன் உள்ளிட்டோர் ரெட் கார்ப்பெட்டில் என்ட்ரி கொடுத்தனர். அனைவரும் இருந்த அரங்கில் ரஜினி என்ட்ரி கொடுக்க, அரங்கமே அதிர்ந்து விசில் பறந்தது. ரஜினி அனிருத்தை உற்சாகத்துடன் ஆரத்தழுவியது நெகிழ்ச்சியான மொமன்ட்டாக மாறியது.

இதற்கிடையில் ‘ஹண்டர் வண்டார்’, ‘மனசிலாயோ’ என வேட்டையன் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் வைப் செய்ய அரங்கமே கோலாகலமானது. இதையடுத்து ‘வேட்டையன்’ படத்தின் டீஸர் (Prevue) வெளியிடப்பட்டது. அமிதாப் பச்சன், ரஜினி, ஆடுகளம் கிஷோர், ரித்திகா சிங் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் வர, என்கவுன்டர் சரியா, தவறா என்ற விவாதத்துடன் கதை நகர்வதாக டீசரில் ஹின்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் வழக்கமான பஞ்ச் இல்லாமல் வெளியாகியிருக்கும் இந்த டீசர், இத்திரைப்படம் வழக்கமான ரஜினி படத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. பகத் பாசில் கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் டீசரில் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி யாக நடித்திருக்கும் ரஜினி கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடாமல் இன்னும் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் த.செ.ஞானவேல் இந்த சஸ்பென்ஸை உடைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், விஜய்யின் கத்தி படத்தின் வீடியோ காட்சிகளுடன், ரஜினியின் ‘தர்பார்’, ‘வேட்டையன்’ பட காட்சியையும் சேர்த்து திரையில் போடப்பட்ட வீடியோவிற்கு அரங்கமே அதிர்ந்தது. லைக்கா தயாரித்தப் படங்களின் தொகுப்பாக இந்த வீடியோ அரங்கத்தில் போடப்பட்டது.

இந்த விழாவின் ஹைலைட்டாக இருக்கும் ரஜினியின் மோடிவேஷன் ஸ்டோரியையும், அனிருத்தின் லைவ் பெர்ஃபாமென்ஸையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.