ஆஸியை அடுத்து சவுத்ஆப்பிரிக்காவை வெளுத்த ஆப்கன், இன்னும் ஒரு அணி மட்டும் தான் பாக்கி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேநேரத்தில், அந்த அணி ஐசிசி முழுநேர உறுப்பினர் அங்கீகாரம் பெற்ற 12 அணிகளில் 11 அணிகளை வீழ்த்திய பெருமையையும் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு அணிக்கு எதிராக மட்டும் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அந்த அணி இந்தியா தான். ஆஸ்திரேலியா, தென்னாப்பிராக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரிய அணிகளை எல்லாம் அந்த அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வீழ்த்தியிருக்கிறது. இந்திய அணியை மட்டும் ஒரு போட்டியில் கூட வீழ்த்தவில்லை. 

ஆனால், இரண்டு முறை இந்திய அணியை வீழ்த்துவதற்கான வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்தது. நூலிழையில் அந்த வெற்றியை பெறும் வாய்ப்பை தவறவிட்டது ஆப்கானிஸ்தான். இதுவரை இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு டெஸ்ட், 4 ஒருநாள் போட்டி மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகள் டையில் முடிந்தது. 2018 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, பெரும் பரபரப்புக்கு மத்தியில் டையில் முடிந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூருவில் நடைபெற்ற டி20 போட்டியும் இரண்டு முறை இரண்டு முறை டையில் முடிந்தது. அதனால், இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றியை வசமாக்கியது. 

இதனால் இப்போது அந்த அணியின் அடுத்தக்குறி இப்போது இந்தியா பக்கம் திரும்பியிருக்கிறது. கடைசி 12 மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகளையெல்லாம் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது. ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளை மட்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை ஒருமுறைக்கும் மேல் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது. 

இதனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மகிழ்ச்சியில் இருக்கிறது. இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் அந்த அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை வசமாக்கியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22 ஆம் தேதி நாளை நடைபெற இருக்கிறது. இப்போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க அணியை ஒருநாள் போட்டியை ஒயிட்வாஷ் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.