ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் மீண்டும் கால் பதிப்பது உறுதியான நிலையில், முந்தைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அமெரிக்க ஆட்டோமோட்டிவ் நிறுவனமான ஃபோர்டு, தனது எண்டெவர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யாது. அதற்கு பதிலாக, நிறுவனம் இந்திய சந்தையில் ஃபோர்டு எவரெஸ்ட் என்ற ஒரு எஸ்யூவியை அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிகிறது.
இதற்க்கு முனு எண்டெவர் என்று பெயரிடப்பட்ட எஸ்யூவியின் பெயரை மாற்றி, ’ஃபோர்டு எவரெஸ்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். இந்த முடிவின் பின்னணியில் வர்த்தக முத்திரை சிக்கல்களும் இருக்கின்றன.
எவரெஸ்ட் பெயர் வேறொரு நிறுவனத்தால் வர்த்தக முத்திரையாக இருந்ததால், ஃபோர்டு இந்தியா நாட்டில் எண்டெவர் பேட்ஜைப் பயன்படுத்தத் உத்தேசித்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் உரிமையைப் பெற்ற பிறகு, ஃபோர்டு எவரெஸ்டு என்ற பெயரில் இந்திய வாகனத் துறையில் மீண்டும் தனது வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது.
எவரெஸ்ட் மாடல்
ஃபோர்டின் ஆரம்பத் திட்டத்தில், குறைந்த எண்ணிக்கையிலான முழுமையான பில்ட்-அப் (CBU) மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது, எவரெஸ்ட் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவது வர்த்தக ரீதியில் பல நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது. எவரெஸ்ட் என்ற பெயரில், தனது கார்களை நேரடியாக இறக்குமதி செய்யலாம்.
தற்போது, நாட்டில் உள்ளூர் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான உடனடித் திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியாத நிலையில், ஃபோர்டு இந்தியா, CBU மாடல்களில் கவனம் செலுத்தும்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 2026 ஆம் ஆண்டு வரை ஃபோர்டு இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்காது என்று தெரிகிறது. 2023 இன் பிற்பகுதியில், சென்னையின் புறநகரில் அமைந்துள்ள அதன் உற்பத்தி நிலையத்தின் விற்பனையை ரத்து செய்ய நிறுவனம் முடிவெடுத்தது, அங்கு உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு EV களை உற்பத்தி செய்ய முதலில் திட்டமிட்டிருந்தது.
இந்திய உற்பத்தியாளர் ஒருவருடன் கூட்டாண்மை அமைப்பதில் ஃபோர்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. இந்த கூட்டாண்மையால், தொழில்நுட்ப பகிர்வு மற்றும் கலப்பின மற்றும் மின்சார வாகனங்களின் கூட்டு உற்பத்தி சாத்தியம் ஆகலாம். இது தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஃபோர்ட் இணையலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தைக்கான மறு நுழைவுத் திட்டங்கள் குறித்து ஃபோர்டு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் CBU ஃபோர்டு எவரெஸ்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவரெஸ்ட் ரக கார், பிரீமியம் SUV பிரிவில் அறிமுகமாகலாம். அதாவது ஃபோர்ட் காரின் புதிய கார் இந்தியாவில் 60 லட்சம் முதல் 70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அளவில் இருக்கும்.