"சிவகாசி, திருப்பாச்சி படங்களுக்கு சல்மான் கான் பெரிய ஃபேன்" – பேட்ட ராப் விழாவில் பிரபுதேவா பேச்சு

பிரபுதேவா நடிப்பில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட ராப். 1994ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் புகழ்பெற்ற பேட்ட ராப் பாடலைத் தலைப்பாக வைத்த இப்படத்தை உருவாக்கியுள்ளனர். செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது.

இதில் வேதிகா, சன்னி லியோன், ரமேஷ் திலக், பக்ஸ், விவேக் பிரசன்னா, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரபுதேவா, “சல்மான் கான் சாருக்கு, விஜய் சாரின் திருப்பாச்சி, சிவகாசி படங்கள் ரொம்ப பிடிக்கும், ‘நாம அதை பண்ணலாமா’ன்னு கேட்டுகிட்டே இருப்பார்” எனப் பேசினார்.

நான் 11th ஃபெயில்!

பிரபுதேவா பேசியதாவது,

“வேதிகா, சன்னி லியோன், ரமேஷ் திலக், பக்ஸ், விவேக் பிரசன்னா, வையாபுரி ஆகியோருடன் நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜோபி சார் கூட வொர்க் பண்ணது புடிச்சிது.

பேட்ட ராப் குழு

இமான் ஒரு ஜென்டில் மேன். ரொம்ப நைஸ், பாசிடிவ். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் 11ம் வகுப்பு ஃபெயில். என்னைவிட அதிகம் படிச்சவங்களைப் பார்த்தா பிரம்மிப்பா இருக்கும். அப்படி பாடலாசிரியர்களைப் பார்த்தாலும் அப்படி இருக்கும். அவங்களுக்கு கரக்‌ஷன் சொல்லும்போது ஓவரா பண்றோமோன்னு தோணும். அதனாலேயே அவங்க கிட்ட நெருங்கிப் பழகத் தயங்குவேன்.” எனப் பேசினார்.

திருப்பாச்சி, சிவகாசி

மேலும், “வேதிகா மாதிரி நானும் பேரரசு சார் படத்துக்கு ஃபேன். சல்மான் கான் சார், விஜய் சாரின் திருப்பாச்சி படத்தை வியந்து பாராட்டுவார். ‘நாம பண்ணலாம் பிரபு’ன்னு சொல்வார். விஜய் அவருக்குத் தெரியும், நான்தான் டைரக்டர் சாரைப் பற்றிச் சொன்னேன். சிவகாசி படத்தையும் இப்படிப் பாராட்டி சொல்லிக்கிட்டே இருப்பார். ரெண்டு படத்துக்கு அவர் பெரிய ஃபேன்” எனப் பேசினார்.

இயக்குநர் பேரரசு

சன்னி லியோன், வேதிகா, சங்கர் சார்…

“வேதிகா நல்ல ஹார்ட் ஒர்கர். எல்லா சீனுக்கும் முழுசா தயாராகி வருவாங்க. பாலா சார் படத்துல எல்லாம் நடிச்சிருக்காங்கன்னா நமக்கு தெரியும்ல…

சன்னி லியோன் நடிப்பு டான்ஸ் எல்லாத்தையும் விட, அவங்க எல்லாரையும் ரொம்ப மதிப்பாங்க. நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. அவங்க கூட நடிச்சது நைஸ்.

சங்கர் சாருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். அவங்கதான் இந்த பாட்டை உருவாக்கியது.” என்று பேசியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.