தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு முடிந்தவரை சென்று தமது வாக்குகளை வழங்குமாறு திகாமடுல்ல தெரிவத்தாட்சி அலுவலர் சித்தக அபேவிக்ரம தமது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற்பகல் 4 மணியுடன் வாக்களிப்பு செயற்பாடுகள் நிறைவடைய உள்ளதுடன் இறுதி கட்டம் வரை காத்திருக்காது வாக்குகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கும் தமது வாக்குகளை அளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாளர் ஒருவர் அவசியமாயின் அதற்கான உதவியாளரை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவித்த அவர் அதற்காக கிராம உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வைத்திய சான்றிதழ் என்பவற்றை தம்முடன் எடுத்துச் செல்லுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
உடல் அசௌகரியங்களுக்கு உள்ளான நபர்களுக்காக எவ்வித இடையூறுகளும் என்று தங்களது வாக்குகளை அளிப்பதற்காக சகல வாக்களிப்பு நிலையங்களையும் அண்டியதாக முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் சுட்டிக்காட்டினார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 528 வாக்களிப்பு நிலையங்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் காலை 10 மணி வரை 30 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்கள் மிகவும் சுய ஆர்வத்துடனும் திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கரைப்பற்று சம்மாந்துறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமது வாக்குகளை வழங்குவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இன்று பிற்பகல் 6 மணியளவில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் விபரித்தார்.