போனின் ரேடியேஷன் அளவை தெரிந்துக் கொள்ள சுலப் வழி! மொபைல் வாங்கலாம், ஆனால் அபாயத்தை விலை கொடுத்து வாங்கலாமா?

மொபைல் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், மொபைலை வாங்குவதற்கு முன் அதன் ரேடியேஷனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்… பொதுவாக நாம் நம்முடையை மொபைல் போனை கைகளில் அல்லது நமது தங்களிடம் வைத்திருக்கிறோம். செல்போன்களின் தேவை அத்தியாவசியமானது தான் என்றாலும், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

பொதுவாக மொபைலை வாங்கும்போது பெரும்பாலானவர்கள், போனின் அனைத்து அம்சங்களையும் பார்த்தாலும், மொபைல் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், உண்மையில் போனின் கதிர்வீச்சு குறைவாக இருந்தால் மட்டுமே அதனை வாங்க வேண்டும்.

சரி, வாங்கிய போனின் கதிர்வீச்சை எப்படி சரிபார்ப்பது? சுலபமான வழியை தெரிந்துக் கொள்வோம். இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றல்ல இரண்டு கைப்பேசிகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒன்று அலுவலக வேலைக்காகவும் மற்றொன்று தனிப்பட்ட உபயோகத்திற்காகவும் பயன்படுத்துவதால் மொபைல் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) SAR என்ற வரையறை கதிர்வீச்சு தொடர்பனது. SAR மதிப்பு என்பது ஸ்மார்ட்போன் மூலம் அனுப்பப்படும் ரேடியோ அலைவரிசை ஆகும். SAR எண்ணானது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறினால், அது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

 டயல் செய்யவும்

ஒரு எண்ணை டயல் செய்வதன் மூலம் உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அளவைக் கண்டறியலாம், இது எந்தவொரு மொபைலின் SAR மதிப்பையும் எளிதாகக் கண்டறியும் சுலபமான வழியாகும். ஒன்று என்ற எண்ணை டயல் செய்தால் உங்கள் போனின் கதிர்வீச்சின் அளவு எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதன்பிறகு, ஆபத்து இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

SAR மதிப்பு

ஸ்மார்ட்போனின் SAR மதிப்பீட்டை, மொபைல் தயாரிப்பு நிறுவனம், போனின் பெட்டியுடன் வரும் பயனர் கையேட்டில் குறிப்பிடுகின்றன, ஆனால் பொதுவாக யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசியின் கையேட்டை தவறவிட்டிருந்தால், எண்ணை டயல் செய்வதன் மூலம் உங்கள் மொபைலின் SAR அளவை சரிபார்க்கலாம்.

எண் ‘*#07#’

உங்கள் மொபைலில் இருந்து ‘*#07#’ என்ற எண்ணை டயல் செய்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போன் தானாகவே SAR அளவைக் காட்டும். 1.6 W/Kgக்கு அதிகமாக இருந்தால், உங்கள் மொபைலை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கதிர்வீச்சு காரணமாக இந்த நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது
மொபைல் கதிர்வீச்சு உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். இதன் காரணமாக, மனமும் அறிவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு சீரற்றதாகி மூளையின் நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.

கருவுறுதலில் பிரச்சனை

கருவுறுதலில் மோசமான விளைவையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு கரு உண்டாவதில் பிரச்சனை என்றால், ஆண்களுக்கு விந்தின் தரம் அளவு என பல பாதிப்புகள் ஏற்படும். மேலும், புற்றுநோய், மூட்டுவலி, அல்சைமர் மற்றும் இதய நோய் அபாயத்தை கதிர்வீச்சு அதிகரிக்கிறது. எனவே, உங்கள் மொபைலின் SAR அளவு பரிந்துரைக்கப்பட்ட தரநிலையின்படி இருந்தாலும், நீங்கள் மொபைலைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். மொபைலை தொடர்ந்து பயன்படுத்துவது உயிருக்கு உலை வைக்கும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.