ஜூனியர் என். டி. ஆர்
தெலுங்கு சினிமா மற்றும் ஆந்திர அரசியலின் அடையாளமான என். டி.ஆரின் பேரன். தற்போதைய தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன். தாத்தாவின் மறு வெர்ஷனாக தெலுங்கு சினிமாவில் களமாடத் தொடங்கி, ‘இவரின் தாத்தா தான் என்.டி.ஆர்’ என்று 2கே தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். ‘RRR’ மூலம் உலகமெங்கும் புகழடைந்தவரின் அடுத்த படமான ‘தேவரா’ ரிலஸூக்கு ரெடி! ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். வாஞ்சையாக வரவேற்றவரிடம் தமிழிலேயே வந்தன வார்த்தைகள்.
‘RRR’ மிகப்பெரிய வெற்றி. உலகமே கொண்டாடிச்சு. அதுக்குப் பிறகு நீங்க நடிச்சிருக்கிற படம் ‘ தேவரா’ வெளியாகப்போகுது. எப்படி இருக்கு மனநிலை?
” நம்ம உழைப்பு எல்லாத்தையும் ஒரு படத்துக்காக போட்டு, அது வெளிவர தயாராக இருக்கும்போது என்னதான் அந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும் உள்ளுக்குள்ள ரொம்ப டென்ஷனாகத்தான் இரூக்கும். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் வேலைப் பார்த்த ஒவ்வொருத்தரும் அவங்களோட பெஸ்டைக் கொடுத்திருக்காங்க. மக்கள் இதை ஏத்துக்கிட்டு கொண்டாடுவாங்கன்னு பெரிய நம்பிக்கை இருக்கு”
டபுள் ஆக்சன் ரோல், கடல் பின்னணியில நடக்கிற கதைன்னு, ட்ரெய்லர் பார்க்கும்போது தெரியுது, ‘தேவரா’ என்ன கதை?
” ‘தேவரா’ படத்தின் அடிப்படை ஐடியா என்னன்னா, நசுக்கப்பட்ட, நசுப்பட்டுக்கிட்டுருக்கிற மக்களுக்கு தைரியம் கொடுக்கிறவன் தான் கமர்ஷியல் மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல ஹீரோ. அதுவே மக்களுக்கு ஓவரா தைரியம் வந்திடுச்சினா, அவங்களுக்கு பயம் ஏற்படுத்தனும். அப்படி பயம் கொடுக்கிறவன் தான் ‘தேவரா’. இதுதான் மற்ற படங்களுக்கும் இதுக்கும் வித்தியாசம். கமர்ஷியல் மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல ‘தேவரா’ வேறோரு ஆங்கிள்ல கதை சொல்லும். நிச்சயமா மக்களுக்கு பிடிக்கும், அந்த மெசேஜூம் அவங்ககிட்ட போகணும், போகும். ”
‘ஜனதா கேரேஜ்’ வெற்றிக்குப் பிறகு, ‘தேவரா” படத்துல நீங்களும் இயக்குநர் கொரடாலா சிவாவும் இணைஞ்சிருக்கீங்க. இது எப்போ பிளான் பண்ணினது?
” RRR’ நடந்துக்கிட்டிக்கும்போது, சிவா சார் இந்த ஐடியாவை என்கிட்ட சொல்லி, இது எப்படி இருக்குன்னு கேட்டார். சூப்பரா இருக்கு. புதுசா இருக்கு. நீங்க வொர்க் பண்ணுங்கன்னு சொன்னேன். RRR முடிஞ்ச பிறகு, என்கிட்ட முழுகதையையும் முடிச்சிட்டு வந்து சொன்னார். எனக்கு ரொம்ப எக்சைட்டாகிடுச்சு. 10 மாசம் ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ணி, டெக்னீசியன்களை உள்ள எடுத்துட்டு வந்து , நல்ல நடிகர்களை கமிட் பண்ணி பிரமாண்டமா ஆரம்பிச்சோம். நான் நம்புறது கதையை மட்டுந்தான். கதை பிடிச்சிருந்தால் உடனே ரெடியாகிடுவேன்.”.
இவ்வாறு படம் பற்றிய பல சுவாரசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.