நம்மில் பலர் திரைப்பட வெறியர்களாக இருப்போம். சாப்பிடும்போது, படிக்கும்போது என எப்போதும் பிடித்த படத்தை பார்த்து மகிழ்ந்திருப்போம். ஆனால் அறுவை சிகிச்சையின் போது கூட படம் பார்த்த பெண்மணியினை உங்களுக்குத் தெரியுமா..?
ஆனந்த லட்சுமி என்ற 55 வயதான பெண்மணி கை கால்கள் உணர்ச்சியின்மை மற்றும் தொடர் தலை வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு காரணம் தனது மூளையில் கட்டி இருப்பதனை அவர் பின்னர் அறிந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெருமளவுக்கு தனக்கு வசதி இல்லாத காரணத்தால் அவர் ஆந்திராவில் உள்ள காக்கினாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார்.
பெண்மணியினை சோதித்த பின்னார், அவரது மூளையில் 3.3 X 2.7 cm அளவிலான கட்டி இடதுப்புறத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. நிபுணர் அவருக்கு அவெக் கிராணியோடனோமி (awake craniotomy) என்ற சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். இந்த சிகிச்சையின் போது சிகிச்சைக்குள்ளாகுபவர் விழித்திருக்கவேண்டும். இதனால் கட்டியை அகற்றும்போது நிபுணர்கள் அவரது நரம்புமண்டல செயல்பாட்டை கண்காணிக்க முடியும்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள சிகிச்சையின் போது அந்த பெண்மணிக்கு அதுர்ஸ் என்ற ஜூனியர் என் டி ஆர் -ன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சிகிச்சையின் போது அவரால் விழித்திருக்க முடிந்தது. மேலும் அவரால் அமைதியுடனும், கவனமாகவும் தொடர முடிந்தது. இரண்டரை மணிநேர அளவிலான அறுவை சிகிச்சையின் முடிவில் அவரது மூளையில் உள்ள கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின் காணொளி பதிவு சுதாகர் உடுமலை என்ற எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. நிபுணர்கள் ஆனந்த லட்சுமி சீக்கிரம் குணமடைவார் எனவும் இன்னும் ஐந்து நாட்களில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.