இயக்குனர் விஜய் மில்டன், கோலி சோடா படம் குறித்து நம்மிடம் பேசியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு படத்தை ரசிகர்கள் ஒப்புக்கொண்டது குறித்து அவர் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு வந்த பதில்களை பற்றியும் கோலிசோடா ரைசிங்கில் குக்க்கு வித் கோமாளி படத்தில் நடித்ததற்காகப் புகழ் பெற்ற புகழை வில்லனாக நடிக்க வைத்த முடிவு குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
இப்போ வெப்சீரிஸ் பண்றது அதிகமாகி இருக்கு. நீங்க சினிமால இருந்து வெப்சீரிஸ் பண்ணும்போது என்னென்ன மெனக்கெடல் இருந்தீச்சு?
“வெப்சீரிஸ்ங்கிறது வேறோரு மீடியம். இந்த வெப்சீரிஸோட புரோடியூசர் என்னை வெப்சீரிஸ் பார்க்க சொன்னாரு. ஆனா எந்தவொரு வெப்சீரிஸையும் பாக்கல. என்கிட்ட ஒரு கதை இருக்கு அதை எதிர்ல இருக்கிறவங்களுக்கு சொல்லணும் அவ்வளவுதான் எனக்கு இருந்தது. நான் ‘மழை பிடிக்காத மனிதன்’ க்கு பயங்கரமா வேலை பார்த்திருக்கேன். ஆனா இந்த கோலிசோடா ரைசிங் வர்ற ரெஸ்பான்ஸை பார்க்கும்போது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். “
புகழை எல்லாருக்கும் ஒரு காமெடி நடிகராகத்தான் தெரியும். அவரை வில்லனா காமிச்சிருக்கீங்களே அதைப்பத்தி சொல்லுங்க?
“புகழ் கேரக்டரை வில்லன் ஆக்குனதுக்கு காரணம் மிஷ்கின்தான். மிஷ்கின் அஞ்சாதே படத்துல பாண்டியராஜனை ஒரு கட்ஸா நிக்க வச்சிருப்பாரு. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே தெரிஞ்சதே வச்சி பண்ணி நம்ம என்னைக்கு கத்துக்க போறோம்ன்னு தோணிச்சு. டிவில குக்கு வித் கோமாளி பார்க்கும் போதுதான் புகழைப் பிடிச்சி நடிக்க வச்சேன்.”
இவ்வாறு வெப்சிரீஸ் பற்றிய பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…