வாஷிங்டன்: இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு ஜூனில் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை இஸ்ரேலின் மொசாட்டும்அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் சைபர் தாக்குதல் மூலம்தடுத்து நிறுத்தியது குறித்த தகவல் கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் இஸ்பகான் மாகாணம், நடான்சு நகரில் அணு சக்தி தளம் உள்ளது. அங்கு கடந்த 2009-ம் ஆண்டில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் விஞ்ஞானிகள் வெற்றியை நெருங் கினர். இதை தடுக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டும் ரகசியமாக திட்டமிட் டன. இதன்படி இரு நாடுகளின் உளவு அமைப்புகளும் இணைந்து ஸ்டக்ஸ்நெட் என்ற கணினி வைரஸை உருவாக்கின.
சைபர் தாக்குதலை தடுக்கும் வகையில் ஈரானின் நடான்சு அணு சக்தி தளத்தின் கணினிகள், இணைய இணைப்புகளில் இருந்து முற்றிலுமாக துண்டித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் இணையம் வழியாக ஸ்டக்ஸ்நெட் வைரஸை நடான்சு அணு தளத்தில் ஊடுருவ செய்ய முடியவில்லை.
எனவே யுஎஸ்பி வழியாக ஈரானின் அணு சக்தி தள கணினியில் ஸ்டக்ஸ்நெட் வைரஸை பரப்ப சிஐஏ, மொசாட் உளவாளிகள் முடிவுசெய்தனர். இதற்காக நெதர்லாந்தை சேர்ந்த இன்ஜீனியர் எரிக் என்பவரை ரகசிய உளவாளியாக நியமித்தனர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஈரான் நாட்டை சேர்ந்தவர்.
எரிக் மூலமாக ஸ்டக்ஸ்நெட் வைரஸ் ஈரானில் பரப்பப்பட்டது. முதலில் நடான்சு அணு சக்தி தளத்தோடு தொடர்புடைய நிறுவனங்களின் கணினியில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் யுஎஸ்பி வழியாக செலுத்தப்பட்டது. இந்த வைரஸ் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு யுஎஸ்பி வழியாக பரவிக் கொண்டிருந்தது. ஈரானில் சுமார் 12,000 கணினிகளை கடந்து கடைசியாக நடான்சு அணு சக்தி தளத்தின் கணினியில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் ஊடுருவியது.
சுமார் 12,000 கணினிகளில் அமைதியாக இருந்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ், நடான்சு அணு சக்திதளத்தில் கணினியில் புகுந்தபோதுவேலையை காட்டத் தொடங்கியது.யுரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தும் சீமென்ஸ் நிறுவனத்தின் சென்ட்ரிப்யூஜ் உபகரணங்கள் தப்பும் தவறுமாக செயல்பட்டன. சுமார் 5 மாதங்கள் போராட்டத்துக்கு பிறகே ஈரான் இன்ஜினீயர்களால், ஸ்டக்ஸ்நெட் வைரஸை கண்டு பிடிக்க முடிந்தது. இதுதான் உலகின்முதல் சைபர் தாக்குதல் ஆகும்.
மொசாட்டின் உளவாளியாக செயல்பட்ட நெதர்லாந்து இன்ஜினீயர் எரிக் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஈரான் உளவாளிகள் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வைரஸ் தாக்குதலால் ஈரான் விஞ்ஞானிகளுக்கு அணு ஆயுத ஆராய்ச்சியை முதலில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.