2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பாக லாபத்தா லேடீஸ் என்ற இந்தி மொழித் திரைப்படம் அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதை வெல்வது வாழ்நாள் கெளரவமாகத் திரையுலகினர் கருதுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான ‘சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவு’ போட்டிக்கு அனுப்ப, இந்தியா சார்பில் மொத்தம் 29 படங்களைப் பரிசீலித்து, அதில் லாபத்தா லேடீஸ் படத்தைப் பரிந்துரைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 29 படங்களில், மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய 6 தமிழ் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’. பாலின சமத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி-யிலும் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. சமீபத்தில் கூட இத்திரைப்படம் உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.
தெலுங்கிலிருந்து 3 படங்களும், மலையாளத்திலிருந்து 4 படங்களும், ஒடியா மொழியிலிருந்து 1 படமும், இந்தியிலிருந்து 12 படங்களும், மராத்தியிலிருந்து 3 படங்களும் முதற்கட்ட பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…