ஒரே இரவில் ஐபோன் 15 & 14 விலைகள் குறைந்தன! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிம் குக்கின் பிளான்!

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலைகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளன, இது ஐபோன் வாங்க ஆசையுள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாக மாறிவிட்டது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் இணையதளம் தெரிவித்துள்ளது

ஐபோன்கள் விலை

ஐபோன்கள் விலை அதிரடியாய் குறைக்கப்பட்டன. இந்த மாதம் அறிமுகமான ஐபோன் 16 சீரிஸ் விற்பனையில் உள்ளது, புதிய போன் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து,  பழைய மாடல்களை மாற்றி, லேட்டஸ்ட் மாடல் வாங்குபவர்களுக்கும் எக்ஸேஞ்ச் ஆஃபர்களையும் ஆப்பிள் வழங்கியுள்ளது. அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலைகள் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஐபோன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது. ஆப்பிள் இணையதளத்தின்படி ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 இன் புதிய விலை

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15 இன் 128GB மாடலின் விலை ரூ.79,900ல் இருந்து ரூ.69,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது, தற்போது ஐபோன் 15 பிளஸ் 128ஜிபி மாடல் ரூ.79,900 என்ற விலைக்கு கிடைக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.