நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துப் புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். கடந்த மே 4-ம் தேதி அவரின் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கினை தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதில், அவர் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் அது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இருப்பினும் ஜெயக்குமார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் 190 பேருக்கு மேல் சம்மன் அனுப்பினர். இதன் அடிப்படையில் தினமும் 5 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலத்தை போலீஸார் வீடியோவில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு இதுவரை 140 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரேஜ், ஆய்வாளர் உலகராணி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.ஜி மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் மற்றும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம், உரையாடல்களின் வீடியோ ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் உயரதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தினர். மேலும் ஜெயக்குமாரின் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி போலீஸார் கூறுகின்றனர். இந்த வழக்கில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb