இன்று மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனை குறைந்த விலைக்கு வாங்க நல்ல வாய்ப்பு. மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ போன் எவ்வளவு ரூபாய்க்குக் கிடைக்கும், அசல் விலை, தள்ளுப்படிக்கு பிந்தைய விலை, எங்கு வாங்கினால் மலிவாக கிடைக்கும், எப்படி வாங்குவது என அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்.
அதற்கு முன்னதாக, சீனவின் லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்துக் கொள்வோம். எட்ஜ் 50 சீரிஸில் வெளிவந்துள்ள ஐந்தாவது ஸ்மார்ட்போன் ஆகும். எட்ஜ் 50, எட்ஜ் 50 ஃப்யூஷன், எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 புரோ மாடல்கள் இதற்கு முன்பு வெளியாயுள்ளன.
6.4 இன்ச் pOLED டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 7300 ப்ராஸசர், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்ட இந்த போன், ஐந்து ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போனில், 50+13+10 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. அதில், 32 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ டிஸ்ப்ளே
16.25 செமீ (6.4) POLED LTPO சூப்பர் HD டிஸ்ப்ளே 1.5K தெளிவுத்திறன், HDR10+ பிரகாசம் 3000 nits வரை உள்ளது. DCI-P3 மற்றும் 10-பிட் கொண்ட சினிமா வண்ணங்களை (cinematic colors) வழங்குகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ செயலி
இது மேம்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் ஐந்து வருட மென்பொருள் ஆதரவு, ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் AI கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சேமிப்பகம்
512 ஜிபி சேமிப்பு அல்லது 256 ஜிபி உள்ள போன் எட்ஜ் 50 நியோ.
ஹலோ UI மென்பொருள்
ஹலோ UI தனிப்பயனாக்கம் மற்றும் Moto Unplugged போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வருகிறது மோட்டோரோலாவின் எட்ஜ் 50 நியோ போன்.