Ajith: துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயம்; மீண்டும் இறங்கும் அஜித்!

நடிகர் அஜித் கார் பந்தயத்தில் விரைவில் கலந்துகொள்ள இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனியின் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தது ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். படங்களைத் தவிர்த்து சில பொழுது போக்கு விஷயங்களிலும் அஜித் ஈடுபட்டு வருகிறார்.

அஜித்

சமீபத்தில் உலகம் முழுக்க அஜித் பைக்கில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார். கார் மற்றும் பைக் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் விரைவில் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

“2025 ஆம் ஆண்டு ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அஜித் திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் அஜித்தே இது குறித்த அப்டேட்டை வெளியிடுவார்” என்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

அஜித் கார்பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதை இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.