சவுண்ட் இன்ஜினியர் விஜயானந்த் ஸ்பாட் ரெக்கார்டிங் மற்றும் டப்பிங்கை எளிதாக்கும் வகையில், சக்கரங்களில் பொருத்தப்பட்ட மொபைல் ரெக்கார்டிங் ஸ்டுடியோவான ‘வாய்ஸ் ஆன் வீல்ஸ்’ பற்றி பேசி இருக்கிறார். ஸ்பாட் ரெக்கார்டிங் சவால்களால் ஈர்க்கப்பட்டு, இந்த புதுமையான அமைப்பு அதிநவீன உபகரணங்கள் மற்றும் ஒலிப்புகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, பல்வேறு சூழல்களில் விரைவான மற்றும் திறமையான பதிவுகளை செயல்படுத்துகிறது. இது குறித்த நமது கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார்..!
“25 வருசத்துக்கு முன்னாடி விஜயானந்தோட வாழ்க்கை எப்படி இருந்தது?”
“நான் பி.எஸ்.சி கணிதவியல் படிச்சி முடிச்சதும் வேலைக்கு போக வேண்டிய சூழல் இருந்ததுனால டிப்ளமோல மல்டிமீடியா கோர்ஸ் ஒண்ணு படிச்சேன். அதுக்கப்புறம் கிராபிக்ஸ் டிசைனரா ஒரு வருசம் வேலைப்பார்த்தேன். அந்த இடத்துல கத்துக்கிட்டது தான் சவுண்ட் இஞ்சினியரிங். அப்படியே இதுக்குள்ள வந்தாச்சு. “
“எல்லா சவுண்ட் இஞ்சினியருக்கும் ஒரு ஸ்டூடியோ இருக்குங்கிறது பெரிய கனவா இருக்கும். உங்களோட கனவைப் பத்தி சொல்லுங்க?”
“நான் ஒரு பத்து வருசமா வேற வேற ஸ்டூடியோ வொர்க் பண்ணிருக்கேன். அங்க நிறைய எக்யூப்மென்ட்ஸை பாத்துருக்கேன். அது இருந்தா இன்னும் நல்லா வொர்க் பண்ணிருக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதுனால நான் தனியா ஸ்டூடியோ வைக்கும்போது அதுல அந்த எக்யூப்மென்ட்ஸ் எல்லாதையும் வச்சிருந்தேன்.”
“மொபைல் டப்பிங்க்ல நிறைய நடிகர்கள் பேசியதை பார்த்தோம். இங்க பேசிய எதாவது ஒரு ஸ்டாரோட டயலாக் இங்க பேசுனது நியாபகம் இருக்கா?”
“என்னால மறக்க முடியாததுனா, இதை கமல் சார் தான் லாஞ்ச் பண்ணாரு. நா அவர்கிட்ட என்னோட புரோமோசனுக்கு உங்க வாய்ஸை தான் யூஸ் பண்ணன்னும்னு கேட்டப்போ எதுவுமே சொல்லாம கமல் சார் பண்ணிக் கொடுத்தாரு. அதைத் தான் நான் இப்ப வரைக்கும் பயன்படுத்திட்டு இருக்கேன்.”
முழுமையான வீடியோவை காண…