"Laapataa Ladies-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்" – வசந்தபாலன் சொல்லும் படங்கள் என்னென்ன?

ஆஸ்கர் விருதுகளின் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளத் திரைப்படம் Laapataa Ladies.

முன்னதாக, இந்த விருதுக்குப் பரிந்துரைக்க 29 படங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய 6 தமிழ்ப் படங்களும் அடங்கும்.

ஆல் வி இமேஜின் அஸ் லைட், உள்ளொழுக்கு, ஆட்டம், ஆடு ஜீவிதம் ஆகிய மலையாளப்படங்களும் பரிசீலிக்கப்பட்டன.

லாபத்தா லேடீஸ் | Laapataa Ladies

இறுதியாக, அமிர் கானின் தயாரிப்பில், அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளிவந்த ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதையும், அதற்கான பரிந்துரைகளையும் திரைத்துறையினர் உயர்ந்த கௌரவமாகக் கருதுகின்றனர். பிரபலங்கள் அனைவரும் கிரண் ராவ்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸை விட இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் எனத் தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

வசந்த பாலன்

அவரது பதிவில், “Laapataa ladies இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம்.

ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கருக்கு இந்த படத்தைப் பரிந்துரைத்திருக்கலாம் என நீங்கள் நினைக்கும் திரைப்படம் என்ன? – கமென்டில் சொல்லுங்க!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.