டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிஎன்ஜி சந்தையில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கின்ற நிலையில் நெக்ஸான் காரின் அடிப்படையில் டர்போ சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு ரூ.8.99 லட்சம் முதல் ரூ.14.59 லட்சம் வரை கொண்டு வந்திருக்கின்றது.
இந்தியாவின் முதல்முறையாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினில் சிஎன்ஜி கொண்டு வந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகச் சிறப்பான வகையில் 100 PS பவரை வெளிப்படுத்தவும் 170 Nm டார்க் வழங்கும் வகையில் என்ஜினை கொண்டு வந்திருக்கின்றது இந்த எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
டாடாவின் நெக்ஸான் iCNG மைலேஜ் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 24 கிமீ ஆகும்.
டேஷ்போர்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் ஆல்-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, லெதரெட் இருக்கைகள், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் அனைத்து வகைகளும் ஆறு ஏர்பேக்குகளுடன் வந்துள்ளது.
நெக்ஸான் ஐசிஎன்ஜி காரில் Smart (O), Smart +, Smart +S, Pure, Pure S, Creative, Creative + மற்றும் Fearless + PS என 8 விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.
Nexon iCNG Price list
- Smart (O) – ₹ 8.99 லட்சம்
- Smart + – ₹ 9.69 லட்சம்
- Smart +S – ₹ 9.99 லட்சம்
- Pure – ₹ 10.69 லட்சம்
- Pure S – ₹ 10.99 லட்சம்
- Creative – ₹ 11.69 லட்சம்
- Creative + – ₹ 12.19 லட்சம்
- Fearless + PS – ₹ 14.59 லட்சம்
(Exshowroom India)
குறிப்பாக தனது கார்களில் பொதுவாக ட்வீன் சிலிண்டர் என்ஜின் ஆனது பின்புறத்தில் உள்ள பூட் பகுதியில் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் ஸ்டார்ட் செய்யும் வகையில் அமைந்து பூட் ஸ்பேஸ் இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது.