வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிசான் மேக்னைட் காம்பேக்ட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அடிப்படையான மெக்கானிக்கல் மாற்றங்கள் மற்றும் எஞ்சின் தொடர்பான எந்தவொரு மாற்றங்களும் இருக்காது. மற்றபடி, டிசைன் மாற்றங்கள் கூடுதலான புதுப்பிக்கப்பட்ட பல்வேறு வசதிகள் மட்டும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேக்னைட் முன்புறத்தில் புதிய கிரில் டிசைன், எல்இடி ஹெட்லைட் மற்றும் பம்பர் ஆகியவை புதுப்பிக்கப்பட உள்ளது. இன்டீரியரில் சிறிய அளவிலான மாறுதல்கள் கொடுக்கப்பட்டு இருக்கலாம். புதிய டிசைன் பெற்ற டைமண்ட் கட் அலாய் வீல், கிரில் அமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் டெயில் லைட் மாற்றங்கள் உள்ளதை டீசரில் தெரிய வந்துள்ளது.
1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கும் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் எனவே எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது.