இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள Call of the Blue version 4.0 டீசரில் MT-09, R7, XSR 155, NMax 155 மற்றும் டெனீர் 700 என ஐந்து மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து இந்திய சந்தையில் அதிகரித்து வந்தாலும் FZ-X என்ற மாடலை கொண்டு வந்தது.
மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான XSR 155 நியோ ரெட்ரோ மாடலான இந்த பைக்கில் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு மற்றும் பல்வேறு ரெட்ரோ அம்சங்களை பெற்று விளங்குகிறது. இந்த பைக்கில் யமஹாவின் R15, MT-15 பைக்குகளில் உள்ள 155சிசி லிக்யூடு கூல்டூ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
MT-03, R3 போன்ற மாடல்களை தொடர்ந்து முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள MT-09, R7, டெனீர் 700 அட்வென்ச்சர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த மாடல்களும் இந்திய சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்து, பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் காட்சிக்கு வந்த ஏரோக்ஸ் 155 மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற Nmax 155 ஸ்கூட்டரும் டீசரில் இடம்பெற்றிருக்கின்றது.