மொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிதி பரிவர்த்தனை முதல், முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை அனுப்புதல் பெறுதல் என, மொபைல் போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது. வாடிக்கையாளரின் அதிகரித்து வரும் டேட்டா தேவையை கருத்தில் கொண்டு ரிலையனஸ் ஜியோ நிறுவனம் பல டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோவின் டேட்டா திட்டங்களில் 50ஜிபி வரை மொபைல் டேட்டா கிடைக்கும். இதற்கான கட்டணம் 49 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் மொபைல் டேட்டாவை கூடுதலாக பெற விரும்பினால், ஜியோவின் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம். அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..
ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் தினசரி டேட்டாவுடன் வருகின்றன. இருப்பினும், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்பவர்களுக்கும், ஆன்லைனில் படிக்கும் பயனர்களுக்கும் அதிக மொபைல் டேட்டா (Mobile Data) தேவைப்படுகிறது. அத்தகைய பயனர்களுக்கு நிறுவனம் டேட்டா ஒன்லி பேக்கையும் வழங்குகிறது. பயனர்கள் இந்த பேக்குகளின் மூலம் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டாவைப் பெறுகிறார்கள். இன்று நாம் ஜியோவின் டேட்டா ஒன்லி பேக் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..
ஜியோ டேட்டா பேக் (Jio Data Only Pack)
ஜியோவின் ரூ 49 திட்டம் (Jio Rs 49 Plan)
ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்கள் 1 நாளுக்கான வரம்பற்ற டேட்டாவைப் பெறுகிறார்கள். இதில் 25ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். வரம்பை கடந்த பிறகு மொபைல் டேட்டாவின் வேகம் 64kbps ஆக குறையும்.
ஜியோவின் ரூ.175 திட்டம் (Jio Rs 175 Plan)
ஜியோ ரூ.175 திட்டத்தில், பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா கிடைக்குக். திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். தரவு தவிர, ஜியோவின் இந்த திட்டத்தின் மூலம் Sony LIV, Zee5 மற்றும் JioCinema Premium ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கும். பயனர்கள் 10 க்கும் மேற்பட்ட OTTகளுக்கான சந்தாவைப் பெறுகிறார்கள்.
ஜியோவின் ரூ.219 திட்டம் (Jio Rs 219 Plan)
ஜியோ ரூ.219 கட்டணத்தில் கிடைக்கும் டேட்டா ஆட்-ஆன் பேக்கில் 30ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள். தரவுகளைத் தவிர வேறு பயன் எதுவும் இதில் இல்லை.
ஜியோவின் ரூ.289 திட்டம் (Jio Rs 289 Plan)
ஜியோவின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 40ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம்.
ஜியோவின் ரூ 359 திட்டம் (Jio Rs 359 Plan)
ஜியோ நிறுவனத்தின் இந்த திட்டத்தில், பயனர்கள் 50 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம்.