கடந்த சில தினங்களாக திமுக – விசிக இடையே விரிசல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்த வீடியோ வைரலானது.
அதைத் தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பின. கூட்டணிக் கட்சிகள் இணைந்து பெற்ற வெற்றியை தங்களது சுய வெற்றிபோல திமுக பிரசாரம் செய்தது தவறு என்றும் வட மாவட்டங்களில் விசிக கூட்டணி இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட விசிக தலைவர்களே ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து மௌனம் காத்துவந்தார்.
இன்று விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா கருத்துகள் குறித்துப் பேசினார், “கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை, விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.
என்னுடைய சமுக வலைத்தள பக்கத்தில் வெளியான ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை பலரும் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டனர். அந்த விவாதங்களைத் தொடர்ந்து மேலும் மேலும் வாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை. சிக்கல் எழவும் செய்யாது.” எனப் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ.ராசா கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “உள்கட்சி விவகாரங்களைக் குறித்து கட்சியின் முன்னணி தோழர்களுடன் கலந்துபேசி முடிவுகளை எடுப்போம். பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் என முன்னணி பொறுப்பாளர்களுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறேன். இதுகுறித்து நாங்கள் மீண்டும் கலந்துபேசி முடிவெடுப்போம்” என்றார் திருமாவளவன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88