Lubber Pandhu `படத்தை பார்த்துவிட்டு ரசிகர் சொன்ன அந்த வாழ்த்து..' – நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’.

சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக வளர்ந்து வரும் சிறந்த ஆட்டகாராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞரான ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்குச் சரி நின்று தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டோடு சேர்த்து சமூக நீதியையும் பேசி சிஸ்கர்களைப் பறக்கவிட்டு நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருகிறது இத்திரைப்படம்.

லப்பர் பந்து

இதையொட்டி இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், “இத்திரைப்படம் வெளியானபோது சபரிமலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து திரும்பியவுடன் இயக்குநர் என்னிடம் ‘படம் நல்லா போயிட்டிருக்கு..’ என்றார். அதைக் கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு எல்லோரும் கொடுத்த நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும்தான் எங்களுக்கு நல்ல புரோமோஷனாக இருந்தது. அதுதான் இந்த வெற்றி விழாவிற்குக் காரணம். ஒரு நல்ல ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்திற்காக நான் ரொம்ப நாள் காத்திருந்தேன். அது இப்போது நடந்துவிட்டது. எல்லோரும் நன்றி.

நல்ல வரவேற்பு, வசூல் என்பதையெல்லாம் தாண்டி, படம் பார்த்தவர்களிடம் ‘நாங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம்…’ என்றோம். அதற்கு படம் பார்த்தவர்கள், ‘உங்களைவிட பல மடங்கு சந்தோஷத்தில் நாங்கள் இருக்கிறோம்’ என்றனர். அதுதான் இப்படத்திற்கான உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

ஹரிஷ் கல்யாண்

மேலும் இயக்குநர் தமிழரசனுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ் கல்யாண், “நான் உங்கள் சகோதரர் மாதிரியெல்லாம் இல்லை, உண்மையிலேயே சகோதரர்தான். இயக்குநரின் எழுத்திற்கு நல்ல பாராட்டுகள் வந்தது. அவரின் அந்த எழுத்துதான் படம் திரையில் நன்றாக வந்ததற்குக் காரணம். இப்படத்திற்கு வரவேற்புக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி பெரியளவில் வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.