இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, ஹரிஷ் கல்யாண், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கிரிக்கெட்டில் இரு ஆண்களின் ஈகோ பிரச்னை, அதிலேயே இன்னொரு லேயராக சாதிய பிரச்னை, இதற்கிடையில் காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, விஜயகாந்த் பாடல்கள் என எதையும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி முழுமையான படமாக வந்திருப்பதை தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இத்தகைய வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இன்று சக்ஸஸ் மீட் நடத்தினர். படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பேசிய படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான ஸ்வாசிகா, “ரொம்ப எமோஷனலான தருணம் இது. என்னோட முதல் படம் 16 வயசுல பண்ணேன். கனவோடு சென்னைக்கு வந்தேன். ஆனா எதுவுமே நடக்கல. நானும், அம்மாவும் மனவருத்தத்தோட ரயிலேறி கேரளா போய்ட்டோம்.
அதுக்கப்புறம் இப்போ இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் தமிழ்ல இப்படி ஒரு காம்பேக் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ் மாதிரி இருக்கு. டைரக்டர், புரொடியூசர் எப்படி என்னை நம்பி இவ்ளோ பெரிய கேரக்டர் கொடுத்தாங்கன்னு தெரியல, எல்லாத்துக்கும் நன்றி. 16 வயசுல உடைஞ்சுபோன கனவு இப்போ மறுபடியும் வந்துட்டு இருக்கு. இங்க வீடெல்லாம் கட்டணும், செட்டிலாகணும் என்ற அந்த 16 வயசு கனவுக்குள்ள போய்ட்டேன். இன்னும் நெறைய தமிழ் படம் பண்ணனும். இந்தப் படத்துல என்னோட சக நடிகர்கள் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.
யசோதா கேரக்டரை நான் நல்ல பண்ணிருக்கேன்னு தமிழ் சார் ஒருநாள் கூட சொன்னதில்ல. இப்போவாவது சொல்லுவார்னு இவ்ளோ நாளா காத்துட்டு இருக்கேன். இன்னைக்காவது சொல்லுவாருனு நெனைக்கிறேன். என்னோட கெத்து தினேஷ் சார் கூட `குக்கூ’ படத்துல நான் நடிக்குறதா இருந்தது. என்னமோ அது நடக்கல. இப்போ இத்தனை வருஷம் கழிச்சு அவருக்கு ஜோடியா நடிச்சதுல ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னொரு வாழ்க்கை கொடுத்ததுக்கு மொத்த படக்குழுவுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…