Vetrimaaran: “ரஜினிகாந்த் பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற காரணம் இதுதான்!" – வெற்றிமாறன்

‘The Hollywood Reporter’ என்ற அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ரவுண்ட் டேபிள் நிகழ்வில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன், கரண் ஜோஹர் போன்ற திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த ரவுண்ட் டேபிள் நிகழ்வில் ஹேமா கமிட்டி அறிக்கை, ஓடிடி தளங்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கங்கள், திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

வெற்றிமாறன்

அதில் வெற்றிமாறன் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில், ரஜினிகாந்த் பா.ரஞ்சித் படங்களில் நடித்தது குறித்து பேசியதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விவாதத்தில் சினிமாவின் முன்னணி நடிகர்கள், புதிய இயக்குநர்களுடனும், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களிலும் பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது பேசிய வெற்றிமாறன், ” இந்த விஷயத்தில் உதாரணத்திற்கு நான் ரஜினிகாந்தை சொல்வேன்.

ரஜினிகாந்த் ரஞ்சித்தை அழைத்து, ரஜினிகாந்திற்கான ஒரு பாணியில் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அந்தப் படம் பா.ரஞ்சித்துடைய படமாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்து அவருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் முன்னனி நடிகர்கள் புதிய இயக்குநர்களின் திறமைகளைப் பார்த்தும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர்.

ரஜினிகாந்த், பா.ரஞ்சித்

இந்த மாற்றம் வழக்கத்திற்கு மாறான ஒரு படைப்பை சினிமாவிற்கு கொடுக்கிறது. அதேபோல லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்முட்டி நடித்ததையும், அப்படத்தை அவர் தயாரிக்க முன்வந்ததையும் உதாராணமாக கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.