புதுச்சேரி டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல் அசதியுடன் சளி, காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளானார். இதையொட்டி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரிடம் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு ஆலோசனை தெரிவித்ததன்படி அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் நமவச்சிவாயத்தின் ரத்த […]
