நடிகை ஊர்வசி ”மனோரமாவை எல்லாரும் மரியாதையா `ஆச்சி’ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, நான் மட்டும் `ஆத்தா’ன்னு தான் கூப்பிடுவேன். எல்லார்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துப்போம் இல்லியா… அந்த வகையில நான் ஆத்தாகிட்ட இருந்து கத்துக்கிட்டது, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
சிட்டியை தாண்டி, படப்பை மாதிரி இடங்களுக்கு ஷூட்டிங் போனோம்னா, ‘வா, ஏதாவது செடி, கொடி இருக்கான்னு பார்த்துட்டு வருவோம்னு என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. போற வழியில எலுமிச்சை மரத்தைப் பார்த்திட்டாங்கன்னா, பத்து இலைகளைப் பறிச்சிட்டு வந்திடுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும், அங்க இருக்கிறவங்ககிட்ட அந்த இலைகளைக் கொடுத்து, ‘லைட்டா பிளாக் டீ போட்டு, பாத்திரத்தை கீழே இறக்குறப்போ இந்த இலைகளை கிள்ளிப்போட்டு மூடி வெச்சிடு. அத கொஞ்ச நேரம் கழிச்சி வடிகட்டி எடுத்துட்டு வந்து கொடு’ன்னு சொல்வாங்க. அந்த எலுமிச்சை இலை டீ அவ்ளோ வாசனையா இருக்கும். குடிச்சா அவ்ளோ ஃபிரெஷ்ஷா ஃபீல் பண்ணுவோம். மனோரமா ஆத்தா சொல்லிக்கொடுத்த அந்த டீயை நான் இன்னிக்கும் போட்டுக் குடிக்கிறேன்.
இதே மாதிரி ஒரு பொரியலும் சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கெல்லாம் குப்பைமேனிக் கீரைன்னா, உடம்புல சொறி, சிரங்கு வந்தா அதை மஞ்சளோட சேர்த்து அரைச்சுப் பூசுவோம்கிறது மட்டும்தான் தெரியும். ஆனா, ஆத்தா ஒருமுறை அந்தக் கீரையை வேரோடு பறிச்சிட்டு வந்து நல்லா கழுவி, வேரைக் கிள்ளிப் போட்டுட்டு, நல்லெண்ணெய்ல தாளிச்சு சாப்பிட்டாங்க. ‘நீயும் ரெண்டு பிடி சாப்பிடு. வயித்துல இருக்கிற தேவையில்லாத புழு, பூச்சியெல்லாம் வெளியே போயிடும்’னு எனக்கும் சாப்பிட கொடுத்தாங்க. இந்த மாதிரி நிறைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆத்தா கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்.
இதே மாதிரி நானும் ஒரு கீரைப் பொரியல் செய்வேன். பூசணி இலை, பறங்கி இலை, பாகற்காய் இலை மாதிரி நாம சாப்பிடுற காய்கறிகளோட இலைகளை நறுக்கிப் போட்டு பொரியல் செய்வேன். அது உடம்புக்கு அவ்ளோ நல்லது” ன்னு சொல்றார் நடிகை ஊர்வசி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88