200 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ஸ்டோர்ம் இவி எல்ஆர் (StromEV LR) மற்றும் 140 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஸ்டோர்ம் இவி T1250 என இரண்டு மாடல்களை ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ரூபாய் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோம் இவி மாடல் 4 சக்கர இலகுரக வர்த்தக வாகன பிரிவில் மிக சிறப்பான வசதிகளை வழங்குகிறது. 1250 கிலோ சுமைதாங்கும் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாக இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் திறனுடன் 200 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் 30Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
குறைந்த விலை மாடல்கள் 19Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 140கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலகுரக வர்த்தக வாகன சந்தையில் மிக சிறப்பான வகையில் ஓட்டுநரின் பாதுகாப்பினை உறுதி செய்ய ADAS (Adavanced Driver Assistance System) இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் முன்புற மோதலை தவிர்க்கும் எச்சரிக்கை, டேஷ்கேம், இரவுநேரங்களில் ஓட்டுநருக்கு சிறப்பான காட்சியை வழங்க நைட்வியூ அசிஸ்ட், டிஜிட்டல் லாக் வசதியும் உள்ளது. மிக விரைவு சார்ஜர் ஆதரவு, பொழுதுப்போக்கு சார்ந்த வசதிகளை பெற்ற சிஸ்டம் உள்ளது.
- Euler StromEV LR – ₹ 12.99 லட்சம்
- Euler StromEV T1250 – ₹ 8.99 லட்சம்
தமிழ்நாட்டில் ஆய்லர் மோட்டார்ஸ் டீலர்கள் சென்னை, கோவை மற்றும் வேலூரில் மட்டும் உள்ளது.
Euler Motors நிறுவன முதல் தயாரிப்பான HiLoad EV 2021 ஆம் ஆண்டு மூன்று சக்கர வாகன பிரிவில் வெளியிடப்பட்டு 31 நகரங்களில் இதுவரை 6,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹரியானாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் தற்போது பல்வாலில் ஆண்டுக்கு 36,000 யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ரூ.100 கோடி உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது.