Good News | அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்

Diwali Bonus and Dearness Allowance Latest Update: அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. அதைக்குறித்து பார்ப்போம்.

இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கான முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் அல்லது அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாம தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்தும் முக்கிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்கவும் தமிழ்நாடு அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் இரண்டையும் குறித்து முக்கிய தகவலை தீபாவளிக்கு முன்னதாகவே அறிவிக்க உள்ளனர். அதற்கு தேவையான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. 

அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த ஆவணங்களையும், தகவல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலுக்காக அதிகாரிகள் தயார் செய்து வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்த உடனே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

அகவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்த முடிவுகள் இறுதி நிலையில் உள்ளதால், தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாசம் முதல் வாரத்தில் வெளியாகும் எனத்தகவல்.

மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரைக்கும் அகவிலைப்படி உயர்வு 50% எட்டி இருக்கிறது. இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 53% அல்லது 54% ஆக உயரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அல்லது 4% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், இது அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். இதன் காரணமாக சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.