இந்தியத் திரையுலகில் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 2020, செப்டம்பர் 25-ம் அவர் இறந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழ் நெஞ்சங்களில் பாடும் நிலாவாக என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவரின் நினைவாகவும், அவரின் புகழைப் போற்றும் வகையிலும், தன் கடைசி மூச்சு வரை அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிடுமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் எஸ்.பி.பி-யின் மகன் சரண் கோரிக்கை வைத்தார்.
இதனை உடனடியாக ஏற்ற முதல்வர் ஸ்டாலின், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு `எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அதைத்தொடர்ந்து, `மனு அளித்து 36 மணி நேரத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்த அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிக்க மிக்க நன்றி” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சரண். இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நண்பரும், இசைஞானி என்று அழைக்கப்படுபவருமான இளையராஜாவும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இளையராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…